அஜித், ரஜினிக்கு இதெல்லாம் தெரியும்!! விஜய்யை கடுமையாக வெச்சு செய்த நக்கீரன் கோபால்..
நக்கீரன் கோபால்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை ஆற்றியபோது கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்யை பலரும் விமர்சித்தும் கண்டித்தும், கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
அதிலும் சிலர் விஜய்க்கு ஆறுதலாகும், அவர் வெளியிட்ட வீடியோவுக்கும் ஆதரவாகவும் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது பிரபல மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் விஜய்யை படுமோசமாக விமர்சித்து பேசியுள்ளார்.

அஜித், ரஜினிக்கு இதெல்லாம் தெரியும்
அதில், ரஜினி, அஜித் ஏன் அரசியல் பக்கம் வரவில்லை. அவங்களுக்கு தெரியும், கண் மூடித்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். என் ரசிகர்களை பனையமாக வைத்து அரசியலுக்கு வரமாட்டேன்னு ரஜினி சொல்றாரு. இன்னைக்கு வரை அஜித் சொல்றாரு, நீங்க புண்பட்டுறாதீங்கடா. அவங்க மனுஷன் சார்.
டிரான்ஸ்பார்மர் கம்பத்துல நிக்கிறான். இத்தனை மூடன்களை வைத்திருக்கும் அவன், இதெல்லாம் வேண்டாம், கட்சிய கலைத்திடுறேன்னு சொல்லல. நீங்க ஏறுக்கடான்னு சொல்ற தலைவன் சார் அவன். 41 பேர் சொத்தப்பின்னும், கொன்னப்பின்னும் மறுபடியும் வருவேன்னு சொல்றான், என்னால் தூங்கவேமுடிய என்று ஆதங்கத்துடன் நக்கீரன் கோபால் தெரிவித்துள்ளார்.