பணத்திற்காக எல்லாம் என் புருஷனை குறை பேசாதீங்க, களத்தில் இறங்கிய எரும சாணி விஜய் மனைவி

Youtube Web series
By Tony Apr 27, 2026 09:30 AM GMT
Report

ரிசார்ட்

ஹாட்ஸ்டார் நிறுவனம் ரிசார்ட் என்ற வெப் சீரிஸை வெளியிட்டு வருகின்றது. இந்த சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இதில் எரும சாணி விஜய் நாயகனாக நடிக்க, தலைவாசம் விஜய் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

பணத்திற்காக எல்லாம் என் புருஷனை குறை பேசாதீங்க, களத்தில் இறங்கிய எரும சாணி விஜய் மனைவி | Nakshatra About Anuragha Issue

இந்நிலையில் சமீபத்தில் இந்த சீரிஸில் நடிக்க வந்த அனுராகா, நடித்ததற்கு சம்பளமே தரவில்லை, இதுக்குறித்து எருமசாணி விஜய் எந்த பதிலும் சொல்ல மறுக்கிறார், மிரட்டுகிறார் என்றேல்லாம் சொன்னார்.

அக்ரீமெண்ட் போட்டீங்களா

இதை தொடர்ந்து எரும சாணி விஜய் மனைவி நக்‌ஷத்ரா தன் பக்கம் நியாயத்தை வெளியிட்டுள்ளார், இதில் இந்த தொடர் தயாரிப்பாளர் நாங்கள் அல்ல, அக்ரீமெண்ட் பார்த்து தானே கையெழுத்து போட்டீங்க, சம்பளம் வராததற்கு என் கணவரை குறை சொல்வது நியாயமில்லை என கூறியுள்ளார்.