அது ஒன்னும் தப்பான விஷயம் இல்லை.. 18 + விஷயத்தை சொன்ன நகுல் மனைவி

Nakul Actors Tamil Actors
By Dhiviyarajan Jan 11, 2024 02:32 PM GMT
Report

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நகுல்.

இதனை அடுத்து மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நகுல் கடந்த 2016 -ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நகுலின் மனைவி, பாலியல் வன்கொடுமை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், பாலியல் வன்முறையை பொருத்தவரை அது சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி, அது அதற்குள்தான் அடங்கும். அந்த மனிதரை முழுவதுமாக மாற்றி விடும்.

பாலியல் வன்முறை உடல் ரீதியான வன்முறை மற்றும் இல்லை அதில் வார்த்தை ரீதியான வன்முறை, மற்றும் மனரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்டவையும் அடங்கும். செக்ஸ் என்பது ஒன்றும் தவறான வார்த்தை கிடையாது. வயது பொறுத்து, அவர்களுக்கு ஏற்றபடி அதை குறித்து நாம் குழந்தைகளிடம் பேசலாம் என்று ஸ்ருதி ககூறியுள்ளார்.