முத்த காட்சி, நெருக்கமான காட்சியில் நடித்ததால் வீட்டில் பிரச்சனை!.. நடிகர் நானி வெளிப்படை
நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஹாய் நான்னா. இப்படத்தில் சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதில், நானி மிருணாள் தாகூர் இடையே அதிக லிப் லாக் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
இந்நிலையில் பேட்டியில் கலந்துகொண்ட நானியிடம் ரசிகர் ஒருவர் நீங்கள், நடித்த எல்லா படத்திலும் லிப் லாக் காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. ஏன் அப்படி நடிக்க வேண்டும்? என்று கேட்டார்.
பதில் அளித்த அவர், சமீபத்தில் சுந்தரணி, தசரா போன்ற படங்களில் லிப் லாக் காட்சிகள் இல்லை, ஆனால் அதுக்கு முந்தைய படங்களில் இருந்தது. படத்திற்கு அந்த காட்சி தேவையானால் மட்டும் நடிப்பேன். அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் என் வீட்டில் தகராறு நடக்கிறது என்று நானி கூறியுள்ளார்.