திருநங்கை சாபம் பலித்துவிட்டது..மனைவியை பிரிந்துவிட்டேன்!! நாஞ்சில் விஜயன் எமோஷனல்...
நாஞ்சில் விஜயன்
விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் என்னுடன் நெருங்கி பழகி என்னை ஏமாற்றி விட்டதாக சமீபகாலமாக திருநங்கை வைஷூ புகாரளித்து, வீடியோக்களில் மோசமாக பேசியும் வந்தார். தற்போது ஒரு அதிர்ச்சிகரமான ஒரு பதிவினை நாஞ்சில் விஜயன் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில், திருநங்கை சகோதரி வைஷ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன்.

சமூகவலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும், பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக உங்களோடு பழகிய நல்ல நபை கொச்சைப்படுத்தி என்னைப்பற்றி பல அவதூறுகளை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் பரப்பிக் கொண்டிருந்தீர்கள். அதையெல்லாம் பெரிதுப்படுத்தாமல் உங்கள் முன் நாங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்று தொடர்ந்து பல வகையில் உழைத்துக் கொண்டிருந்தேன்.
உங்களையும், என்னையும் தொடர்புப்படுத்தி பல அவதூறு விமர்சனங்கள் சோசியல் மீடியாக்களில் தினம் தினம், இன்று வரைக்கும் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது. அதை நினைத்து நான் ஒருநாளும் வருந்தவில்லை. ஏனென்றால் என் மனைவி என்னோடு உறுதுணையாக இருக்கிறார் என்று, ஆனால் இன்று என் வீட்டில் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையின் போது, என் மனைவியின் அம்மா, வார்த்தையை விட்டுவிட்டார்கள்.

திருநங்கை சாபம்
நீ ஒரு திருநங்கையை ஏமாற்றிவிட்டு என் பொண்ணை திருமணம் செய்து கொண்டாய் என்று. இந்த சமூகத்தில் சில பேர் என்னை பல கேலி விமர்சனங்கள் செய்த போதும் என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தேன். ஆனால் இன்று அந்த நம்பிக்கையும் வீண் போனது. என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்துவிட்டேன். நிச்சயமாக இந்த செய்தி உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சிலர் கமெண்ட் செய்தார்கள் திருநங்கை சாபம் உன்னை சும்மா விடாதுன்னு. அந்த சாபம் இன்று பலித்துவிட்டது என்கிற சந்தோஷம். நிச்சயமாக அவர்களுக்கும் இருக்கும், எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல் இன்று மீண்டும் தனிமையில் இருக்கிறேன். நிச்சயமாக இன்று உங்களுக்கு நல்ல உறக்கம் வரும் என்று நினைக்கிறேன், நீங்கள் ஜெயித்து விட்டீர்கள், நன் தோற்றுவிட்டேன் என்று அதங்கத்துடன் இரு பதிவினை பகிர்ந்துள்ளார் நாஞ்சில் விஜயன்.
