சர்ச்சையாக பேசிய சரத்குமார்!! சூப்பர் ஸ்டார் பெயரை வைத்து விஜய்யை பழித்திர்த்த நடிகர்!!
தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி பல நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் ஒரு போட்டியாக இருந்து வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது நடிகர் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து பலர் ஆதரவாகவும் எதிர்த்தும் கருத்துக்களை கூறி வந்த நிலையில் நடிகர் நெபோலியன் அவர்கள் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் கூறியது குறித்து சமீபத்திய பேட்டியின் ஓப்பனாக கூறியுள்ளார்.
அதில் எப்படி நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் - புரட்சி தலைவர்ன்னு சொன்னா எம்ஜிஆர் மட்டும் தான் என்று ஆரம்பித்து அந்த காலத்து நடிகர்களுக்கு ஒரு பட்டம் இருக்கிறது.
அதேபோல் சூப்பர் ஸ்டார்-ன்னு சொன்னா அது ரஜினிகாந்த், உலக நாயகந்ன்னு சொன்னா அது கமல் ஹாசன் தான் என்று இருக்கும் போது, அந்த பட்டத்தை இன்னொருவருக்கு பொருத்தி பார்க்கவோ பொருந்தாது.
இதனால் அந்த டாப்பிக்கை விட்டுவிடுங்கள் என்றும் சூப்பர் ஸ்டார்-ன்னு சொன்னா, தமிழ்நாட்டில் என்ன ஏன் இந்தியாவிலேயே அது ரஜினி சார் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே, போக்கிரி படத்தின் போது விஜய்க்கும், நெபோலியனுக்கு இடையே சில பிரச்சனை ஏற்பட்டு இதுவரை பேசாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.