43 வருடத்திற்கு முன்பே காபி குடிப்பதை நிறுத்திய நெப்போலியன்.. காரணம் இதுதான்
Napoleon
Tamil Cinema
Tamil Actors
By Yathrika
நெப்போலியன்
தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக் பிரபலமாக உள்ளார். அவரது மூத்த மகன் தனுஷ் திருமணத்தை ஐப்பான் சென்று நடத்தி வைத்துள்ளார்.
அவரது மகன் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தன.
தனது மகனின் திருமணத்தை முடித் கையோடு நெப்போலியன் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் பேசும்போது, நான் 43 வருடத்திற்கு முன்பே காபி குடிப்பதை நிறுத்திவிட்டேன்.
நான் 18 வயதாக இருந்த போதே என் அம்மா கேன்சர் வந்து இறந்துவிட்டார்கள். என் அம்மாவுக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் அவருக்கு பிடித்த காபியை விட்டுவிட்டேன்.
எனது வளர்ச்சியை பார்க்க என் அம்மா இல்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது என கூறியுள்ளார்.