இரவில் தூங்காமல் அழுதேன்!! கசப்பான நினைவு குறித்து கேப்ரில்லா வேதனை
கேப்ரில்லா சார்ல்டன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா சார்ல்டன்.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான '3' படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.
இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனி இயக்கி நடித்த 'அப்பா' படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

சிறு வயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட கேப்ரில்லா, அடிக்கடி தன்னுடைய நடன வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கேப்ரில்லா வேதனை
இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவருக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், "நான் 10 - ம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் செல்போன் இல்லை.
நான் அதிகம் படிப்பில் தான் கவனம் செலுத்துவேன். அப்போது எனக்கே தெரியாமல் எனது புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்து இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.

அதனால் மிகுந்த வேதனை கொண்டு இரண்டு நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து விட்டேன். என்னை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்.
என் அம்மா என்னை கடுமையாக அடித்தார். அப்போது தான் இது போன்ற சூழலில் எவ்வாறு தைரியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        