4 வயதில் மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து!! மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து செட்டில் செய்யும் ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் ஐபிஎல்-ன் மும்பையின் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யவுள்ள செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று சர்ச்சையில் சிக்கியதோடு கடைசி முதல் இடத்தினை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் நடையை கட்டினார்.
இதனை தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை பலரும் விமர்சித்து வந்தனர். கடந்த 2020-ல் செர்பியாவை சேர்ந்த மாடல் நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை காதலித்து லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து வந்தார். நடாஷா கர்ப்பமாகிய சில மாதத்தில் ஹர்திக் பாண்டியா திருமணம் செய்தார்.
திருமணமாகி ஒரு குழந்தை பெற்று இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவி நடாஷாவும் பிரிந்துவிட்டதாகவும், நடாசா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவுடன் எடுத்த சில புகைப்படங்களை டெலீட் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய சொத்தில் 70 சதவீதம் பங்கினை மனைவி நடாஷாவுக்கு ஹர்திக் பாண்டியா எழுதி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மகனுக்கு 4 வயதாகப்போகும் நிலையில் இருவரும் பிரியப்போவது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.