கல்யாணத்தை போல் ஓசியில் ஹனிமூனில் உல்லாசம்.. ரூபா கூட செலவில்லாமல் முடித்த விக்கி - நயன்தாரா..
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் தான் மிகவும் அடம்பரமாக திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் அவரவர் வேலையில் மிகவும் பிஸியாக இருந்தனர். அந்த வகையில் நயன்தாரா ஜவான் திரைப்படத்திலும், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியிலும் பிஸியாக இருந்தனர்.
இதனிடையே தங்களின் வேலைகள் முடிந்துள்ள இவர்கள் தற்போது Spain நாட்டின் Barcelona நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸை விக்னேஷ் சிவன் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இந்த நட்சத்திர ஜோடிகளின் திருமணத்தை தொகுப்பாக Netflix நிறுவனம் விரைவில் Nayanthara: Beyond the Fairy Tale என வெளியிடவுள்ளது.
மேலும் அவர் Spain நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள மொத்த செலவையும் Netflix நிறுவனம் தான் ஏற்றுக்கொண்டுள்ளதாம். அங்கு அவர்களின் செலவிட்ட அழகிய தருணங்கள் Nayanthara: Beyond the Fairy Tale-ல் இடம்பெற்ற உள்ளதாம்.