நயன்தாராவிற்கு இருக்கும் பழக்கம்! அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்ட உடனா?

ladysuperstar nayanthara nayantara netrikan vigneshshivan
By Edward Jul 31, 2021 06:06 PM GMT
Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன் தற்போது இரு படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

நயன்தாராவின் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளதால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் தள்ளிப் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம் நடந்து விடும் என்று நினைத்திருந்த நிலையில், இப்போது அவரது ஆசை, கனவு இன்னும் இரண்டு ஆண்டுகள் தள்ளிப் போனது. இயக்குனர் “அட்லி “மூலமாக பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் “ஷாருக்கானுடன்” நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் 2 ஆண்டுகளுக்குப் பிறகே திருமணம் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம் நயன்தாரா.

அதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கும் நயன்தாராவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் என்ன?, என்று கேள்விக்கு சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா “இரவு உணவு முடிந்த பிறகு அனைத்து பாத்திரங்களையும் அவரை சுத்தம் செய்த பின்னர் தான் மற்ற வேலைகளை முடிக்க செல்வார் என்று கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.