இப்போதைக்கு இதமட்டும் செய்! திருமணம் எல்லாம் 2 வருஷம் கழித்துதான்! நயன்தாரா..

marriage nayanthara vgneshshivan
By Edward Aug 04, 2021 11:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஐய்யா படத்தின் மூலம் மலையாள நடிகையாக களமிரங்கியவர் நடிகை நயன் தாரா. இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தினை தக்கவைத்து கொண்டு வருகிறார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் நடிகை நயன் அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களிலும் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில், 5 வருடங்களாக காதலித்து வரும் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய 2 ஆண்டுகள் காத்திருக்க கூறியுள்ளாராம்.

சில ஆண்டுகளுக்கு முன் எப்போது திருமணம் என்ற கேள்விகள் இருவரிடமும் ரசிகர்கள் கேட்டு வந்தும் கடந்த ஆண்டு இறுதியில் நடிக்கபோகிறது என்றும், நயன் தாராவின் தந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கூடிய சீக்கிரம் திருமணம் என்று செய்திகள் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நடிகை நயன்தாரா அட்லீ இயக்கத்தில் பாலிவுட் கிங்காங் நடிகர் ஷாருக்கானின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பாலிவுட் படங்களுக்கு சென்றாலே இரு படங்களில் நடிக்க சூழ்நிலை ஏற்படுவதாலும் இந்த முடிவாக கூறப்படுகிறது. இதனால் தற்போது படங்களை இயக்கவும் தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து கொள்ளவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்தும் இருக்குமாறு காதலரிடம் கூறியுள்ளாராம் நடிகை நயன்தாரா. இது சமீபத்தில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.