திருமணத்திற்கு பின் இப்படியா!! ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த நடிகை நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நயன் தாரா - விக்னேஷ் சிவன்
திருமணத்திற்கு பின் ஹனிமூன் படப்பிடிப்பு என்று பிஸியாக இருந்து வந்த நயன் தாரா சில மாதங்களுக்கு முன் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
திருமணமாகி 4 மாதத்தில் எப்படி வாடகைத்தாய் என்று பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நயன் தாரா - விக்னேஷ் சிவன் தரப்பில் எந்த தவறும் இல்லை என்று கூறப்பட்டது.
இதன்பின் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் என்று இருந்து வந்த நயன், தற்போது அவர் நடிப்பில் கனெக்ட் படம் வரும் 22 டிசம்பர் வெளியாகவுள்ளது.

கனெக்ட் ப்ரீ-ரிலீஸ்
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. அதற்கு தன் கணவர் விக்னேஷ் சிவனும் அழகிய தோற்றத்தில் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியாக வந்துள்ளார்.
இறுக்கமான டி-சர்ட் அணிந்து க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


