ஏமாற்றிய அஜித்தால் கணவரை வைத்து பக்கா பிளான் போட்ட நயன் தாரா!! பழிவாங்க இப்படியொரு திட்டமா..
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். இவரின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அஜித்திற்கு விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவனிடம் கதையை மாற்றக்கூறி பலமுறை சொன்னாராம். மேலும் எட்டு மாத காலம் அவகாசமும் கொடுத்தாராம். இருப்பினும் விக்னேஷ் சிவனின் கதையில் எந்த முன்னேற்றம் இல்லாததால் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டாராம்.
இதையடுத்து அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி தான் இயக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

புதிய கூட்டணி
AK 62 திரைப்படம் விக்னேஷ் சிவனிடம் இருந்து கைநழுவியதால், அவரின் திறமையை வெளிப்படுத்த வித்யாசமான கதை அம்சத்தில் புதிய படத்தை இயக்க போகிறாராம்.
அந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நயன்தாரா அறம், மாயா போன்ற பல ஹிட் படத்தை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
