நயன்தாராவிற்கு மீண்டும் திருமணமா? ஆன்மீகத்தால் எடுத்த சோக முடிவு
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் கொண்டார்.
இவர்களின் திருமணம் முடிந்ததிலிருந்து பல பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். விக்னேஷ் நயன்தாரா திருமண நாளில் பவுன்சர்கள் சில பிரபலங்களை தொந்தரவு செய்ததாக கூறப்பட்டது.
அடுத்த நாள் நயன்தாரா திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் செருப்பு அணிந்து சென்று சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். இதையடுத்து இந்த தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது மீண்டும் பெரியசர்ச்சை கிளம்பியது.
அடுத்தப்படியாக நயன்தாரா திருமணத்திற்கு பின்பு வெளிவந்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்தது. மேலும் AK 62 படத்தை இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவன் தவறவிட்டார்.
மீண்டும் திருமணமா?
இந்த பிரச்சனைகளுக்கு காரணம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தவறான நேரத்தில் திருமணம் செய்து கொண்டது தான் என்று ஜோசியகாரர் சொன்னாராம். இதனால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகிவுள்ளது.