நிகழ்ச்சியில் நடந்த கூத்து!! நயன்தாராவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர், நயன்தாரா. தற்போது இவர் ராக்காயி என்ற மிரட்டல் ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமாவில் நடிப்பதை தாண்டி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், நயன்தாரா கடந்த ஆண்டு அவர் தொடங்கிய பெமி 9 என்ற நாப்கின் நிறுவனம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தன் கணவருடன் நேற்று கலந்து கொண்டுள்ளார்.
கடுப்பான ரசிகர்கள்
இவர் சிலருக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் சிலருக்கு உள்குத்தாகவும் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் நயன்தாரா ஒரு சர்ச்சைக்குள் சிக்கி உள்ளார்.
அதாவது, நேற்று காலை 9 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் என சொல்லிவிட்டு மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கணவருடன் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்துள்ளார்.
இதனால், 1 மணிக்கு முடிய வேண்டிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு முடிந்துள்ளதாக இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் வீடியோ வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.