திருமணத்திற்கு அப்படியே மாறி கண்டீசன்களை கொட்டும் நயன்தாரா!! புலம்பிதள்ளும் பட தயாரிப்பாளர்கள்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது திருமணத்திற்கு பின் பாலிவுட் நடிகையாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை நயன் தாரா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வந்தனர். திருமணம் முடிந்த கையோடு ஜவான் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று பல கோடியில் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார்.
மேலும் நடிப்பை தாண்டி தயாரிப்பு, லிப்பாம், ஸ்கின் 9, ஃபெமி9, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்தி காசு சம்பாதித்து வருகிறார். நயன் தாரா சில ஆண்டுகளாகவே ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்தால் பல கண்டீசன்களை போடுவாராம்.
ஆனால் திருமணத்திற்கு பின் அது அதிகரித்துவிட்டதாம். பாலிவுட் சென்றது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி அந்த ரூல்ஸ்-ஐ பிரேக் செய்தார். இந்நிலையில், நயன் தாரா திருமணத்திற்கு பின் சில மாற்றங்கள் இருக்கிறதா என்ற கேள்வியை சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், எனக்கு அப்படி தெரியவில்லை, ஆனால் ஒருசில தயாரிப்பாளர்கள் என்னிடம், சில மாற்றங்கள் நயன் தாராவிடம் காணப்படுவதாகவும், அது வரவேற்கத் தகுந்தவாறு இல்லை என்றும் கூறுகிறார்களாம். அதனால் தன்னையே நயன்தாரா பரிசோதித்து பார்க்குமாறும் சித்ரா லட்சுமணன் தெரிவித்திருக்கிறார்.