அந்த ஒரேவொரு காரணம் தான்!! 20 வருஷமாக கமலை ஒதுக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார்..
Nayanthara
Tamil Actress
Actress
By Dhiviyarajan
வல்லவன் திரைப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகை நயன்தாரா நிஜமாகவே சிம்புவுடன் காதல் வயப்பட்டார்.
அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அந்த படத்திற்குப் பிறகு வேறு எந்த படத்திலும் நயனதாரா லிப் லாக் காட்சிகளில் நடித்தது கிடையாது.
படத்தில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரொமான்ஸ், கவர்ச்சியான காட்சிகள் நடிக்க தயாராக இருக்கும் நயன்தாரா லிப்-லாக் காட்சிகளில் மட்டும் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசன் படங்களில் லிப்-லாக் காட்சி தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த ஒரு விஷயத்தால் தான் நயன்தாரா கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது .