திருமணத்திற்கு பின்பும் நயன்தாராவுக்கு மறுபடியும் அதே பிரச்சனையா!! சமாளிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா சினிமாவில் அறிமுகமானது முதல் பல பிரச்சனைகள் மற்றும் வதந்திகளை சந்தித்து வருகிறார்.
திருமணத்திற்கு முன்பு தான் அப்படி என்றால் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தது முதல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தது வரை பிரச்சனைக்கு மேல் பிரச்சனையை சந்தித்து வந்தார்.
மேலும், ஜவான் படத்தில் பிகினி ஆடையில் அணிந்து நடிப்பார் என்ற தகவலும் வெளியாகியது. அதற்கு பின் நயன் தாரா குறித்த வதந்திகள் பரவாமல் இருந்து வந்ததை அடுத்து தற்போது ஒரு செய்தி உலா வந்துள்ளது.
சென்னையில் இருக்கும் அகஸ்தியா தியேட்டரை நயன் தாரா வாங்கி வேறொரு தொழிலை ஆரம்பிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அகஸ்தியா தியேட்டர் அறக்கட்டளை பேரில் இருப்பதால் தனிநபர் அதை வாங்க முடியாது என்று தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்தது.
இப்படி நயன் தாராவை பற்றிய இந்த வதந்தியை யார் பரப்பியது என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். பல ஆண்டுகளாக இப்பட்இயான வதந்திகள் நயன் தாராவை சுற்றி வரும் இந்த பிரச்சனைக்கு இன்று தீர்வே வரவில்லை.