அணிந்திருந்த ஆடையை அப்படி செய்த நபர்!.. கோபத்தின் உச்சம் சென்ற நயன்தாரா..இதோ வீடியோ
தமிழ் சினிமாவில் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்துடன் இருந்து வரும் நடிகை தான் நயன்தாரா. சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு இவர் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசான இறைவன் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க தற்போது இவர் புதிய தொழில் ஒன்றை கையில் எடுத்துள்ளார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது சொந்தமாக ஒரு அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.
இதன் தொடக்க விழா சமீபத்தில் மலேஷியாவில் நடைபெற்றது. அதில் நயன்தாரா நீளமான உடை அணிந்து வந்திருந்தார். அப்போது அவர் நடக்கும் போது ஒரு நபர், உடையை மிதித்துவிட்டார்.
இதனால் கோபம் அடைந்த நயன்தாரா, அந்த நபரை முறைத்து பார்த்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ