ஹனிமூன் முடிந்த கையோடு அந்த பக்கம் ரூட்டை போட்ட நயன்தாரா!! தனியாக சென்னை வந்த கணவர்..

Nayanthara Vignesh Shivan Shah Rukh Khan Atlee Kumar
By Edward Jun 28, 2022 01:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

காதல் டூ திருமணம்

இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியானதும் ஆசை காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டு முடிவெடுத்திருந்தாராம். ஆனால் சில காரணங்கள் படம் தள்ளிச்சேன்று ஜூன் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நானும் ரவுடி பேபி படத்தில் ஆரம்பித்த காதல் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் திருமணமாக முடிந்தது.

மகாபலிபுரத்தில் கல்யாணம் முடித்துவிட்டு அம்மா வீடு, கொச்சி கோவில் என்று பிஸியாக இருந்திவிட்டு கடந்த வாரம் ஹனிமூனிற்காக தாய்லாந்து சென்றனர் தம்பதியினர். அங்கு எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரது சமுகவலைத்தளபக்கத்தில் பதிவிட்டுவந்தார்.

ஹனிமூன் டூ ஜவான் ஷூட்

சில தினங்களுக்கு முன் ஹனிமூனை தாய்லாந்து பேங்காக்கில் முடித்து விட்டு இந்தியா பறந்தனர் நயன் தாரா- விக்னேஷ் சிவன். இந்தியா வந்த தம்பதியினர் சென்னைக்கு வராமால் மும்பைக்கு விமானத்தை பிடித்துள்ளனர்.

இதற்கு காரணம் திருமணத்திற்கு முன் நயன் தாரா கமிட்டாகிய அட்லீ - ஷாருக்கான கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு தானாம். பாதி படப்பிடிப்பு முடிந்து விறுவிறுப்பாக பட வேலைகளை பார்த்து வரும் அட்லீ மீண்டும் ஷூட்டிங்கை ஆரம்பித்ததால் நயன் தாரா மும்பை ஷூட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றுள்ள சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. நயன் தாரா மும்பை செல்ல விக்னேஷ் சிவன் சென்னையில் அடுத்த படமான ஏகே 61 படத்தின் வேலைகளை ஆரம்பிக்கவுள்ளாராம்.