யார்கூட பழகுறது தான் முக்கியம்!! மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த லேடி சூப்பர் ஸ்டார்

Nayanthara
By Dhiviyarajan 1 மாதம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியானது.

இதையடுத்து இவர், பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார்கூட பழகுறது தான் முக்கியம்!! மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த லேடி சூப்பர் ஸ்டார் | Nayanthara Give Advice To College Students

அட்வைஸ்

சமீபத்தில் கல்லூரி விழாவிற்கு சென்றுள்ள நயன்தாரா, அங்கு படிக்கும் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் அவர், "கல்லூரி படிக்கும் போது உங்கள் நண்பர்களுடன் சந்தோசமாக இருக்கலாம், அந்த வாழ்க்கை மகிழ்ச்சியானது".

"இந்த நேரத்தில் நீங்கள் யாருடன் பழகுறீர்கள் என்பது தான் முக்கியம். இந்த கல்லூரியில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும்.அதனால் மிகவும் கவனமாக இருங்கள்".

"உங்களின் படிப்பை முடித்து, வெற்றியாளராக மாறினால் அப்போது பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். தினமும் உங்கள் பெற்றோரிடம் 10 நிமிடத்தை செலவிடுங்கள் அது தான் அவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும்" என்று நயன்தாரா கூறியுள்ளார்.   

யார்கூட பழகுறது தான் முக்கியம்!! மாணவர்களுக்கு அட்வைஸ் செய்த லேடி சூப்பர் ஸ்டார் | Nayanthara Give Advice To College Students