எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமகிருஷ்ணனின் முறைப்பையன் நான்தான்!! பிரபல நடிகர் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் கதை, திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்ந்து வந்தவர் தான் ரமேஷ் கண்ணா. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் ரமேஷ் கண்ணா, இயக்குநராக ஒரு படங்களை இயக்கியும் இருக்கிறார்.

எம்ஜிஆரின் மனைவி ஜானகி
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் மகனைத்தான் என் தங்கை திருமணம் செய்துள்ளார். அதற்கு முன் ஜானகி எங்களுக்கு உறவுக்காரர் தான்.
ஜானகி என்னுடைய அப்பாவின் அக்கா மகள். அதாவது எனக்கு அத்தைப்பெண், எனக்கு முறைப்பெண், நானும் எம்ஜிஆரும் சகலை முறை. நான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டிய பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார், ஆனால் ரொம்பவும் வயது வித்தியாசம் என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார் ரமேஷ் கண்ணா.

அப்போது எங்கள் குடும்பத்திற்கும் அவர்களின் குடும்பத்திற்கு பிரச்சனை. எம்ஜிஆர், ஜானகியை திருமணம் செய்ய என் அப்பா சம்மதிக்கவில்லை. அவர்களின் திருமணத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து, அதில் வெற்றி பெற்று, அவர்கள் இருவரும் 14 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழக்கூடாது என்று உத்தரவு பெற்றவர்.
அதன்பின்பும் இருவரும் ஒன்றாக இருந்தார்கள், அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழலாம் என்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது என்பது 1982க்கு பின் தான்.
என் அப்பாதான் ஜானகியை கும்பகோணத்திருந்து, அவரின் 13வது வயதில் அவரை அழைத்து வந்து நடனம், நடிப்பு சொல்லிக்கொடுத்து ஸ்டாராக மாற்றினார். எம்ஜிஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற புத்தகத்தை படித்தால் அதில் அவர் என் அப்பா குறித்து குறிப்பிட்டு இருப்பார்.