என்னது ரத்த உறவில் நயன்தாராவுக்கு குழந்தைக்கும் எந்த சம்பந்தமே இல்லையா.. குண்டைப்போட்ட மருத்துவர்..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து 4 மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்ததாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார்.

இரட்டை குழந்தைகள்
இந்த விசயம் இணையத்தில் பரவி நயன் - விக்கி விதிகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்ற விமர்சனங்களும் எழுந்தது. இதற்கான தகுந்த விளக்க அளிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் வாடகைத்தாய் மூலம் எப்படி குழந்தை பெற்றெடுத்தனர் யார் அந்த வாடகைத்தாய் என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் பரவி வைரலானது.

பாரம்பரிய முறை
இந்நிலையில், பிரபல மருத்துவர் ஒருவர், இந்தியாவில் பாரம்பரியமான இந்த வாடகைத்தாய் முறை இருந்துள்ளது. இந்தமுறையில் யார் வயிற்றில் குழந்தை வளர்கிறதோ அவர்கள் தான் அக்குழந்தைக்கு தாயாக இருக்க முடியும். ஆனால் இந்த முறையை தடை விதித்தது இந்தியா.
நயன்தாரா
இரண்டாம் முறை என்பது ஐ வி எப். இந்த கருத்தரிப்பு முறையில் தான் சட்ட ரீதியாக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியும். இந்த முறையில் பிறந்த குழந்தைக்கு வாடகைத்தாய் தேவைப்படாது என்றும் அப்படி தேவைப்பட்டாலும் வாடகைத்தாயின் குழந்தையாக அவர்கள் இருக்க மாட்டார் என்றும் கூறியிருந்தார்.
இதனால் துபாயில் நயனின் உறவு முறையில் இருந்த பெண் வாடகைத்தாயாக இருந்து இரட்டை குழந்தை பெற்று கொடுத்துள்ளார். ஆனால் அக்குழந்தைகளுக்கு நயன் தாரா ரத்த உறவில் தாயாக இருக்க வாய்ப்பில்லை என்றும் விக்னேஷ் சிவன் தந்தை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.