65 வயது மூத்த நடிகருடன் இணையும் நயன்தாரா.. நான்காவது முறையாக கைகோர்க்கும் ஜோடி

Nayanthara Nandamuri Balakrishna
By Kathick Oct 28, 2025 02:40 AM GMT
Report

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மூக்குத்தி அம்மன் 2, Hi, மன சங்கரா வரபிரசாத் காரு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

65 வயது மூத்த நடிகருடன் இணையும் நயன்தாரா.. நான்காவது முறையாக கைகோர்க்கும் ஜோடி | Nayanthara Joining Hands With Balakrishna

இதில் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் இவர் நடித்து வரும் திரைப்படம்தான் மன சங்கரா வரபிரசாத் காரு. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம் நயன்தாரா.

இப்படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்கப்போகிறார் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் படமாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

65 வயது மூத்த நடிகருடன் இணையும் நயன்தாரா.. நான்காவது முறையாக கைகோர்க்கும் ஜோடி | Nayanthara Joining Hands With Balakrishna

இதற்கு முன் நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ராமா ராஜ்ஜியம், சிம்ஹா, ஜெய் சிம்ஹா ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.