நடிகை நயன்தாராவை கவர்ந்த அந்த டாப் சீரியல்.. ஒரு எபிசோடு கூட மிஸ் செய்யமாட்டாராம்!
நயன்தாரா
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.
கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.
நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, என பல திரைப்படங்கள் உள்ளது.
டாப் சீரியல்
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், நடிகை நயன்தாராவுக்கு சன் டிவியில் மிகவும் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான கயல் தொடரை தான் விரும்பி பார்ப்பாராம்.
இந்த சீரியலில் ஒரு எபிசோடு கூட மிஸ் செய்யாமல் பார்ப்பாராம். இந்த சீரியலில் சஞ்சீவ், சைத்ரா ரெட்டி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.