நயன்தாரா மார்க்கெட் அதள பாதாளம் போனதா, பிரபலம் உடைத்த உண்மை
Nayanthara
Tamil Actress
By Tony
நயன்தாரா
நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. இவர் நடிப்பில் பாலிவுட்டில் வெளிவந்த ஜவான் படம் கூட பிரமாண்ட வெற்றியை பெற்றது.
ஆனால், நயன்தாராவிற்கு தமிழகத்தில் சொல்லும் படி எந்த படமும் பெருசாக சமீபத்தில் ஓடவில்லை.
இதனால் நயன்தாரா மார்க்கெட் அதளபாதளம் சென்றதாக ஒரு சில விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அதனால் தான் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தின் தொடக்க விழாவில் கூட கலந்துக்கொண்டார் என கூறினார்கள்.
ஆனால், இதை தயாரிப்பாளர் தனஞ்செயன் முற்றிலுமாக மறுத்துள்ளார், நயன்தாரா மார்க்கெட் குறைந்தால் ஏன் முக்குத்தி அம்மன் 2 படத்திற்கு ரூ 100 கோடி வரை செலவு செய்கிறார்கள் என கேட்டுள்ளார்.
மேலும், இது எல்லாமே ஒரு வன்ம பேச்சு தான் என்பது போலவும் பேசியுள்ளார்.