டி-சர்ட்டை கவனித்தீரா!! காதலருடன் காருக்கு பூஜை போட்ட நடிகை நயன்தாரா ..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா சமீபத்து ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். நடிப்பு, தயாரிப்பு என காதல் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பல வேலைகளை செய்து வருகிறார்.
காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து எப்போது திருமணம் செய்ய போகிறீர்கள் என்ற கேள்வி எழும் சமயத்தில் காதலருடன் வாரத்திற்கு ஒருமுறையாவது அவுட்டிங் சென்று விடுகிறார்.
தற்போது ஒரு புதிய இனோவா காரினை வாங்கி காதலர் விக்னேஷ் சிவனுடன், சிவனுக்கு பூஜை செய்துள்ளார். இந்நிலையில் சிலர் நயன்தாரா போட்டிருக்கும் டி-சர்ட்டினை பார்த்து ஷாக்காகியுள்ளனர்.
பிரண்ட்ஸ் என்ற வசனத்தை குறித்துள்ள இந்த ஆடையை ஒரு வேலை அப்படி இருக்குமோ என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் விக்னேஷ் சிவனின் டி சர்ட்டில் அமெரிக்க ஈகில் என்ற வசனமும் இருந்துள்ளது.