அந்த படம் மாதிரி நடிகை நயன்தாராவின் இதுவும் இப்படியாம்! இயக்குநர் பகீர்..
ladysuperstar
malayalam
nayanthara
prithiviraj
tamilactress
Alphonse Puthren
By Edward
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அல்போன்ஸ் புத்திரம். மலையாள காதல் கதைக்களத்தோடு பெரிய ஹிட் கொடுத்த படமான பிரேமம் இயக்குநர். இப்படத்திற்கு பிறகு இரு படங்களான பாட்டு, கோல்ட் என்று இயக்கி கொண்டு வருகிறார்.
கோல்ட் படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன் தாராவுடன் பிரித்திவிராஜ் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அதன் எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது என்று அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
மேலும் கோல்ட் படம் நேரம், பிரேமம் போன்ற படங்களை போல் இல்லை. இது வேறுமாதிரியான படம் என்று கூறியதுடன், நல்ல நடிகர்கள், பாடல்கள், நகைச்சுவை நிறைந்த படமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இப்படத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.