அந்த விசயத்திற்கு ரஜினி, விஜய், அஜித்-க்கு நோ!! ஷாருக்கானுக்கு மட்டும் ஓகே சொன்ன நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. திருமணத்திற்கு பின் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நயன்தாரா பெரும்பாலும் தன்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சென்று வருவார். ஆனால் தான் நடிக்கும் மற்ற படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார்.
அது ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றாலும் சரி,நோ என்று கூறுவதோடு படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பே அக்ரிமெண்ட் போட்டுவிடுவார். நயன் தாராவை பார்த்து வளர்ந்து வரும் நடிகைகள் கூட நடித்த படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் படங்களுக்கு போட்டுள்ள இந்த கண்டீசனை ஷாருக்கானுக்காக தளர்த்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறாராம். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜவான் படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிகள் பல இடங்களில் நடிக்கவுள்ளதாம்.
அதனால் நயன் தாராவிடம் அட்லீ அடம்பிடித்து ஜவான் படத்தின் பிரமோஷனுக்கு ஓகே சொல்ல வைத்துள்ளாராம். இதற்காக நயன் தாரா ஜவான் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பைக்கு சென்றுள்ளார். சமீபத்தில் நயன் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை கேள்விப்பட்ட சினிமா விமர்சகர்கள், வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவிற்கு இப்படி துரோகம் செய்கிறாரே என்று விமர்சித்தும் வருகிறார்கள்.