லாபத்தில் பங்கு கேட்ட நயன்தாரா.. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா
மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்திருந்தாலும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.
அதன்படி, சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது. ஆனால், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவில்லை. இயக்குநர் சுந்தர் சி தான் இயக்குகிறார். ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா, யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆரம்பிக்கும் பொழுது ரூ. 55 கோடி பட்ஜெட் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இறுதியில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 112 கோடியாகியுள்ளது. கிட்டதட்ட இரண்டு மடங்கு இப்படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது.
இதில் நயன்தாரா தனது சம்பளத்தில் பாதி மட்டுமே வாங்கியுள்ளாராம். மீதி சம்பளத்திற்கு பதிலாக, படத்தின் லாபத்தில் பங்கு கேட்டுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.