அந்த இடத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்தேனா.. நயன்தாரா கொடுத்த பதிலடி.. எதுக்கு தெரியுமா?
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஜவான் படத்திற்கு பின் நயன் தாராவின் மார்க்கெட் அதிகரிக்க சம்பளத்தை 12 கோடிக்கும் மேல் உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியானது.
படங்களில் பிஸியாக நடித்தும், கணவர் மற்றும் பிள்ளைகளுடன் நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.
சர்ஜெரி
சமீபத்தில் நயன் தாரா தனது புகைப்படத்தை பகிர, அதை பார்த்த சிலர் நயன்தாரா அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முக்கியமான நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும்போது என்னுடைய புருவங்களை நான் அழகுப்படுத்திக் கொள்வேன்.
அது என்னுடைய வழக்கம். என் புருவங்கலை நிறைய மாதிரி அழகுப்படுத்தியிருக்கிறேன். அதனால்தான் எனது முகத்தை நான் ஏதோ செய்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் அதில் உண்மையில்லை, இது வெறும் டயட்தான். என்னுடைய உடல் எடையில் நிறைய ஏற்றம் இறக்கங்கள் ஏற்பட்டிருக்கிறது.
அதேநேரம் என் கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டிகிறது. என் கன்னத்தை கிள்ளியும் எரித்தும் பார்க்கலாம் என்று நயன் தாரா குறிப்பிட்டுள்ளார்.