கோடி ரூபாய்க்கு ஆசைப்பட்டு இப்படியொரு ரொலில் நடிக்கிறாரா நயன்தாரா.. காட்டில் ஒரே பண மழை தான்
நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் கைவசம் தற்போது கனெக்ட், ஜவான், இறைவன் ஆகிய படங்கள் உள்ளன. மேலும் Trident Arts தயாரிப்பில் அன்னபூரணி எனும் திரைப்படத்தில் நயன்தாரா கமிட்டாகியுள்ளாராம்.
ஆனால் தற்போது அன்னபூரணி தலைப்பை வேறொரு படத்தில் வைக்கப்பட்டுள்ளதால் நயன்தாரா படத்தின் தலைப்பு மாறும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா.

இந்நிலையில், 35 நாட்கள் கால்ஷீட்டிற்கு சுமார் ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம் நயன்தாரா. இதற்க்கு முன் ரூ.5 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா, தீடீரென தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். எல்லாமே இரட்டை குழந்தை பிறந்த நேரம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.