விக்னேஷ் சிவன் 'நீ ஒரு சைக்கோ'.. மோசமாக திட்டிய நயன்தாரா! என்ன நடந்தது?
Nayanthara
Vignesh Shivan
By Parthiban.A
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகிவிட்ட நிலையில் விரைவில் திருமணமும் நடைபெற இருக்கிறது.
அஜித் படத்தை இயக்கும் முன்பு விக்னேஷ் மற்றும் நயன் திருமணம் நடைபெறும் என தெரிகிறது. இருப்பினும் அவர்கள் தற்போது வரை அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.
நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டிங்கில் தான் விக்கி - நயன் இருவரும் சந்தித்து காதலிக்க தொடங்கினார்கள். அந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரும் முத்த காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது.
ஷூட்டிங்கில் நயன்தாராவை இன்னும் நெருக்கமாக நடிக்கும்படி கூறினாராம் விஜய் சேதுபதி. அப்படி நடித்தால் ஓகேவா என நயன் கேட்க இவரும் சரி என கூறி இருக்கிறார். அதை கேட்டு ஷாக் ஆன நயன்தாரா 'நீ ஒரு சைக்கோ' என கூறினாராம்.