அஜித்தும் வேண்டாம் லாரன்ஸும் வேண்டாம்!! தனி ஆளா கோடிகளில் கல்லா கட்டிய நயன்தாரா..
இந்திய சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் நயன் தாராவுக்கு மட்டுமே தனி வரவேற்பை வேறு வெவலாக கொடுக்கிறார்கள் மக்கள். அப்படி திருமணமாகி குழந்தை பெற்றும் ஹீரோயினாக கலக்கி வருகிறார் நயன். அதற்கு அவரின் சாமார்த்தியமான நடிப்பு தான்.
அப்படி சமீபத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இருந்து விலகியது முதல் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் படத்தில் இருந்து விலகியது வரை தனி ஆளாக இருந்து சமாளித்து தன் திறமையை வைத்தே படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அப்படி ஹீரோக்களுக்கு மத்தியில் முதல் நாள் கலெக்ஷனாக கோடியில் பார்த்திருக்கிறார் நடிகை நயன். அப்படி நெல்சன் இயக்கத்தில் உருவான கோலமாவு கோகிலா படம் 3.47 கோடியை முதல் நாளில் வாரிக்குவித்தது.
அதேபோல் மாயா படமும் வெளியாகி முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 2 கோடி லாபத்தை பெற்றது. மேலும் அறம் படம் 1.58 கோடியை முதல் நாளில் எடுத்தது.
கடந்த ஆண்டு வெளியான கனெக்ட் படம் 1.25 கோடி லாபத்தை ஈட்டியது. இப்படி தனி ஆளாக நடித்து கோடியில் லாபத்தை பெற்று கொடுத்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா. ஜவான் படத்திற்கு பின் பல படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கவுள்ளாராம்.