இரட்டை குழந்தைக்கு பின் வரிசைக்கட்டும் பிரச்சனை!! இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நயன் தாரா..

Nayanthara Vignesh Shivan
By Edward Feb 18, 2023 11:41 AM GMT
Report
290 Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரட்டை குழந்தைக்கு பின் வரிசைக்கட்டும் பிரச்சனை!! இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நயன் தாரா.. | Nayanthara Vignesh Shivan Get 2Nd Time Marriage

இரட்டை குழந்தை - அஜித் 62

திருமணமாகி 4 மாதத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தனர் விக்கி - நயன். இந்த விசயம் பல பிரச்சனைகளை கொடுத்து வழக்கு வரை சென்றது. அதன்பின் நயன் தாரா நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து அந்த பிரச்சனையையும் கொடுத்தது.

இது போதாதென்று, அஜித் 62வது படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன் சில காரணங்களால் படக்குழுவினர் ஒதுக்கி வேறொரு இயக்குனரை கமிட் செய்துவிட்டனர். இப்படி திருமணம் ஆனது முதல் இரட்டை குழந்தை பிறந்த பின்னும் அடுத்தடுத்த பிரச்சனைகளை இன்றுவரை சந்தித்து வருகிறார்கள்.

இரட்டை குழந்தைக்கு பின் வரிசைக்கட்டும் பிரச்சனை!! இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நயன் தாரா.. | Nayanthara Vignesh Shivan Get 2Nd Time Marriage

மீண்டும் ஒருமுறை திருமணம்

இதற்கு முடிவுகட்ட நயன் தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களின் குடும்ப ஜோசியரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். எற்கனவே நயன் தாராவின் தாலியில் தோசம் இருப்பதாக கூறியநிலையில் திருமணத்திற்கு முன் பல பூஜைகளை செய்தி வாழை மரத்திற்கு தாலி கட்டி அதன்பின் கல்யாணம் செய்து கொண்டனர்.

இப்படி பிரச்சனைகள் வரக்காரணம் விக்கி - நயன் திருமணம் செய்து கொண்ட நேரம் சரியில்லை என்று கூறியிருக்கிறார். அதற்காக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்து கொள்ள கூறியிருக்கிறார்கள். அதைகேட்ட நயன் தாரா - விக்னேஷ் சிவன் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக முடிவெடுத்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

You May Like This Video