ரகசியமாக வைத்திருந்த திருமணம்? நயன்தாராவுக்கு தெரியாமல் லீக்கான அழைப்பிதழ்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
படங்களில் நடித்திருந்தாலும் சில காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியும் வந்தார். அப்படி இரு காதல் தோல்விகளுக்கு பின் நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடனான காதல் அதிகரித்துள்ளது.
போகப்போக அது லிவ்விங் டு கெதராக மாறி சுமார் 7 வருட காதல் ஜோடிகளாக வலம் வந்தனர்.எப்போது இருவருக்கும் திருமணம் என்ற கேள்வி பல ஆண்டுகளாக கேட்டு வந்த நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவியது.
எப்போதும் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி இந்த ஜோடி இருவரும் திருப்பதி சந்நிதானத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள் என்றும் கூறப்பட்டது.
இதன்பின் பிரபல விருது விழாவில் இருவரும் சென்ற போது மேடையிலேயே கல்யாண புடவை பற்றி பேசினார்கள். அதில் விக்னேஷ் சிவன் நான் எதாவது ஒன்று சொல்ல அவங்க வேறொன்று எடுத்து வைக்க பிரச்சனையாகும். அதனால் அவர்களே பார்த்துக்கட்டும் என்று கூறிய வீடியோ வைரலானது.
அதேபோல் தான் தற்போது திருமண இடமும் மாறியிருக்கிறது. வருகிற ஜூன் 9ஆம் தேதி மகாபல்லிபுரத்தில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திருமணத்திற்கு யார் யாரை அழைக்கவுள்ளார்கள் எந்த கோவிலில் மற்றும் சர்ச்சில் திருமணம் செய்யவுள்ளார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
You saw it here first! #FirstonPinkvilla: We got our hands on #Nayanthara and #VigneshShivan's wedding invite ?? How pretty is this digital invite! ??@pinkvilla @PinkvillaSouth #Nayanthara #wedding #Nayantharawedding pic.twitter.com/H8vSIsekkh
— Pinkvilla South (@PinkvillaSouth) May 27, 2022