இப்படிதான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களாம்..

Nayanthara Vignesh Shivan
By Edward Oct 13, 2022 12:50 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாராவின் இரட்டை குழந்தை பற்றிய விவாவதம் தான் தற்போது ஊடகங்களின் பேச்சு பொருளாக மாறியுள்ளது. ஜூன் மாதன் 9 ஆம் தேதி ஆசைக்காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு 4 மாதத்திற்கு பிறகு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றுள்ளது தான் அந்த பெரிய செய்தி. விதிமுறைகளை மீறி நயன் - விக்கி தம்பதியின் இதை செய்தது பெரியளவில் பிரச்சனை ஏற்பட்டுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த ஒரு குழுவினை தமிழக அரசு நியமித்துள்ளது.

வாடகைத்தாய் - பெறுவதற்கு இரு முறைகள்

இந்நிலையில் நயன் தாராவின் குழந்தைகளின் வாடகைத்தாய் துபாயில் இருப்பதாகவும் நயனின் சொந்தக்காரர் தான் அதை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க நயன் தாரா - விக்னேஷ் சிவன் எப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற ரகசியம் கசிந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இரு முறைகள் இருக்கிறது. அதில் ஒன்று பாரம்பரிய வகை என்று கூறப்படும் Surrogacy in the traditional sense என்பதாகும். இந்த வகையில், ஆணின் விந்தணு எடுக்கப்பட்டு வாடகைத்தாய் செயற்கையான முறையில் கருவூட்டப்படுகிறார்.

இப்படிதான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களாம்.. | Nayanthara Vignesh Shivan Plan For Which Surrogacy

நயன்தாரா இரட்டை குழந்தை

இரண்டாவது முறை, Gestational surrogacy எனப்படும் கர்ப்பகால வாடகைத்தாய். இந்த முறையில், ஆணின் விந்தணு மனைவியின் கரு முட்டையுடன் சேர்த்து கருவாக உருவாக்கப்படும். பின் அந்த கருவை வாடகைத்தாய் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுக்கபடும். இந்த முறைப்படி தான் நயன்தாரா இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார்களாம். நயனின் அண்ணன் துபாயில் இருப்பதால் இந்த ஏற்பாடு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Gallery