நயன் தாரா - விக்னேஷ் சிவனின் குழந்தையின் வாடகைத்தாய் இவர் தான்?.. வெளியான புகைப்படம்
தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளில் விவகாரம் தான். 7 வருட காதலுக்கு பின் ஜூன் மாதம் நயன் தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கரம் பிடித்தார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்
அதன்பின் ஹனிமூன், ஷூட்டிங் என்று பிஸியாக இருந்து வந்தார் நயன் தாரா. இதன்பின் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது என்று புகைப்படத்துடன் ஷாக் கொடுத்தா விக்னேஷ் சிவன்.
திருமணமாகி 4 மாதத்தில் எப்படி என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில் வாடகைத்தாய் மூலம் விதிகளை மீறி பெற்றுள்ளனர் என்ற விமர்சனமும் எழுந்தது. இதற்காக தமிழக அரசு சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்து வந்தனர்.
இதற்கான ஆதராங்கள் விளக்கங்களை விக்னேஷ் - நயன் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த வாடகைத்தாய் யார் என்ற கேள்வியையும் இணையத்தில் கேட்கத் துவங்கினார். தற்போது அவர் யார் என்ற உண்மையும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
வாடகைத்தாய்
சில ஆண்டுகளுக்கு முன் நயன் தாரா பிரபல கோவிலில் சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்துள்ளார்.
அப்போது வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த பெண்மணியும் நயன் - விக்கியுடன் இருந்துள்ளனர். திருமணத்திற்கு முன்பே இந்த முடிவை எடுத்து தகுந்த தயாரிப்புடனும் விதிகளுடனும் தான் நயன்தாரா குழந்தை பெற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது.
அப்பெண் நயன் தாராவின் நெருங்கிய தோழியாக இருந்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்து கொடுத்திருக்கிறார்.
