குழந்தைகளுடன் ஏர்போர்ட்.. கேமராவை கண்டு நயன்தாரா செய்த செயல் வைரல்
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டாராக நம்பர் 1 நடிகையாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நயன்தாரா. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக உள்ளார்.
கடைசியாக இவரது நடிப்பில் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து நயன்தாரா நடிப்பில் Dear Students, Toxic, Rakkayie, விஷ்ணு வர்தன் படம் என அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. நடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.
செய்த செயல்
இந்நிலையில், நயன்தாரா தனது இரண்டு குழந்தைகளுடன் ஏர்போர்ட் வந்துள்ளார். அப்போது, ஏர்போர்ட்டில் இருக்கும் பத்ரிக்கையாளர்கள் கேமராவை வைத்திருப்பதை பார்த்ததும் நயன்தாரா தனது மகனின் முகத்தை கைகளால் மூடிக்கொண்டார்.
கேமரா flash கண்களில் அடிக்கக்கூடாது என்பதற்காக அவர் பாதுகாப்பாக மகனின் கண்களை மூடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.