கோடிக்கு ஆசைப்பட்டு தலையில் துண்டு போட்ட நயன்தாரா!! புலம்பும் கணவர் விக்னேஷ் சிவன்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் நடிகையாகவும் 12 கோடி சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் நயன் தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்தார் நயன்.
சில ஆண்டுகளாக அவர் சோலோ நடிகையாக நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததாலும் கணவரின் ஏகே படம் கைநழுவி போனதாலும் நயன் தாரா - விக்னேஷ் சிவன் சோகத்தில் இருந்தனர்.
அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார் நயன் தாரா. வெறும் நடிப்பு மட்டும் போதாது, மகன்களுக்காக சொத்தினை சேர்க்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
அதனால், 9 ஸ்கின், FEMI9 நாப்கின் உள்ளிட்ட பல தொழில்களை ஆரம்பித்து அதிலிருந்து சம்பாதிக்க ஆரம்பித்தார். பல கோடி முதலீடு செய்து இப்படியான தொழில்களை ஆரம்பித்ததால் சினிமாவில் பெரும் சறுக்கல்கள் வந்துவிட்டதாம்.
இந்த தொழில்களுக்காக தானே முன்வந்து கவர்ச்சி விளம்பரத்தையும் செய்திருக்கிறார் நயன். இதனால் சினிமா கேரியர் போய்விடும் என்ற அச்சத்தில் இருக்கிறாராம்
அதனால் நயன் தொழில் பக்கம் போகாமல் சினிமாவில் கவனம் செலுத்துமாறு விக்னேஷ் சிவன் கண்டீசன் போட்டிருக்கிறாராம்.