அந்த நடிகருடன் ஷூட்டிங்கில் இப்படியொரு நெருக்கமா!! வைரலாகும் நடிகை நயன்தாராவின் வீடியோ..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்தும் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.
நடிப்பை தாண்டி பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து கல்லாக்கட்டி வரும் நடிகை நயன் தாரா, சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கிளாமர் லுக்கில் சென்று கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன் தாராவின் ஆரம்பகாலக்கட்ட சினிமா வாழ்க்கையில் எந்தவொரு பக்குவமும் இல்லாமல் கவர்ச்சி காட்சிகள், காதல் கிசுகிசுக்களில் சிக்கி அதன்பின் ஆளே மாறி லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்து தக்க வைத்துள்ளார். தற்போது நடிகர் ஜீவாவுடன் ஈ படத்தில் நடித்த போது அப்படத்தின் போட்டோஷூட் நடந்துள்ளது.
அப்போது நடிகை நயன் தாரா இடுப்பில் கை வைத்து, பின்னால் நின்று முத்தம் கொடுக்குமாறு எடுத்த ஷூட்டும் எடுக்கப்பட்டது. அந்த மேக்கிங் வீடியோ இணையத்தில் தற்போது கசிந்து வைரலாகி வருகிறது.