வீட்டிற்கே வந்த பார்சல்! பிரித்து பார்த்த சூர்யா - ஜோதிகாவின் ரியாக்ஷன் இதுதான்?

suriya jyothika sooraraipottru 2dproduction
By Edward Sep 07, 2021 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் சூரரை போற்று படம் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றது. அதே சமயம் பல விருதுகளுக்கும் தேர்வாகியது.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த இப்படத்தின் வெற்றியை கண்டதோடு தற்போது சூர்யா வீட்டினை தேடி ஒரு பார்சலும் வந்துள்ளது. வெளியாகி ஓராண்டு முடிவடையவுள்ள தருணத்தில் படத்திற்கு மெர்ல்போர்ன் திரைப்பட விருதுகளில் இருந்து விருது கிடைத்துள்ளது.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படமாக்கப்பட்ட இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும் சிறந்த நடிகருக்கான விருதும் சூர்யாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. படத்திற்காக அனுப்பப்பட்ட விருதினை பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கும் போது உடன் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா பார்த்து கைத்தட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

வீடியோ