பாய் பெஸ்ட்டி எனக்கு நல்லா அமையல.. நடிகை அனிகா சுரேந்திரன் ஓப்பன் டாக்..
NEEK
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ள படம் நிலவுக்கு என்மீது என்னடி கோபம். இப்படம் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ராபியா கட்டூன், மேத்யூ தாமஸ், ரம்யா ரங்கநாதன், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட இளம் நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடைபெற்றதை அடுத்து படத்தில் நடித்த கலைஞர் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அனிகா சுரேந்திரன்
அந்தவகையில் சமீபத்தில் அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பாய் பெஸ்ட்டி மற்றும் Situationship பற்றி பகிர்ந்துள்ளார்.
எனக்கு Situationship நிறைய இருந்திருக்கிறது என்றும் எனக்கு இருந்த பாய் பெஸ்ட்டி எல்லாரும் சரியாக இருக்கவில்லை, அதனால் எனக்கு அது இல்லை என்று அனிகா சுரேந்திரன் ஓப்பனாக பேசியுள்ளார்.