யாரு சாமி இவரு! 64 வயதில் நீட் தேர்வில் தேர்ச்சி..அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

neet exam
By Jeeva Nov 02, 2021 07:30 AM GMT
Report

இந்தியாவில் இளநிலை மருத்துவப்படிப்புக்கு இனி நாடுமுழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு தான் என மத்திய அரசு கடந்த 2013-ல் அறிவிக்கப்பட்டு அதன்பின் 2016-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக NEET (UG) நடைபெற்று வருகிறது.

பல மாணவர்களும் இந்த நுழைவுத்தேர்வில் எப்படியாவது தேர்ச்சிபெற்றுவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த முனுசாமி சுப்ரமணியன் என்கிற 64 வயதுடைய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

17 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்வு எழுதலாம் என்ற நிலையிருப்பினும் அதிகபட்ச வயது நிர்ணயம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதனால் முனுசாமியால் தேர்ச்சி பெற்றும் மேற்படி எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

  

Gallery