நீ சைகோவா..ஒரு பொம்பளையான்னு திட்ராங்க!! நீயா நானாவில் கலந்து கொண்ட பெண் புலம்பல்..
நீயா நானா
தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்களை பார்த்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்து தெருநாய்களை பிடித்து, கருத்தடை செய்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக பலரும் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.
இதுபற்றி நீயா நானா நிகழ்ச்சியில் விவாதமும் செய்யப்பட்டது. அப்போது தெருநாய்களுக்கு ஆதரவாக பேசியவர்களை கண்டித்தும் கிண்டல் செய்து நெட்டிசன்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
நீ சைகோவா
இந்நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், நீயா நானா நிகழ்ச்சியில் என்னை பார்த்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பலர் என்னை நீ சைகோவா, மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நீ எல்லாம் ஒரு பொம்பளையா என்று பலவகையில் ட்ரோல் செய்கிறார்கள்.
உண்மையில் உங்களுக்கு உள்ளே நடந்தது என்ன என்றே தெரியாது. உங்களுக்கு தெரிந்தது எல்லாம் விஜய் டிவி ஒளிப்பரப்பிய அந்த நிகழ்ச்சி தான். நாயால் பாதிக்கப்பட்ட ஒருவர், நாய்ன் குறுக்கே ஓடிவந்தால் விபத்து நடந்தது என்றார். அப்போது நானும் குழந்தை குறுக்கே வந்ததால், எனக்கும் இரண்டு முறை விபத்து ஏற்பட்டது.
[0ANL5Y
உடனே நாயும் குழந்தையும் ஒன்னா என்று கத்த்னார்கள் அந்த நிகழ்ச்சியில் என்னை பேசவே விடவில்லை, நீங்கள் பேசியது மட்டும் வெளியில் வந்தால் உங்களுக்கு கெட்டப்பெயராகும், நீங்கள் பேசியது வராது என்று சொன்னார்கள். ஆனால் டிஆர்பிக்காக நான் பேசியதை பிரமோ வீடியோவில் பயன்படுத்தினார்கள் என்று கூறி அப்பெண் வீடியோவை பகிர்ந்துள்ளார்.