இயக்குநர் என்னை அப்படி கஷ்டப்படுத்தினார்!! மேடையில் வெளிப்படையாக பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்..
அனுபமா
மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற படங்களில் ஒன்று பிரேமம். இப்படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இப்படத்தை தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா, தற்போது கிஷ்கிந்தபுரி என்ற படத்தில் இளம் இயக்குநர் கெளஷிக் இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ட்ரெய்லர் லான்ச் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் அனுபமா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், திகில் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வகை. இப்படியான கதையை கெளஷிக் கூறியபோது நான் மிகவும் உற்சாகமடைந்தேன். நான் மூன்று வயதில் இருந்தே திகில் படங்களை பார்த்து வருகிறேன்.
சினிமாத்துறைக்கு வந்தப்பின், இத்தனை ஆண்டுகளாக திகில் கதைக்காக காத்திருந்தேன். கெளஷிக் கூறியக்கதை எனக்கு முதலில் புரியவில்லை, ஆனால் அவர் கதையை விவரித்து விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்கள் முடிந்தால் வசனங்களை புரிந்துக்கொள ஒரு அகராதியை கொண்டு செல்லுங்கள்.
கெளஷிக் உடன் பணிபுரிந்தது நன்றாக இருந்தது. கிளைமேக்ஸில் என் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பாக இருந்தது. அவருக்கு கதை மற்றும் உருவாகும் படம் குறித்து முழுமையான தெளிவு உள்ளது. பார்வையாளர்களுக்கு என்ன தேவை என்பதை நாங்கள் இந்த படத்தின் மூலம் வழங்குவோம்.
வசனங்களை பேசுவதில், டப்பிங் ஸ்டுடியோவில் அவர் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினார். ஆனால் சரியான முறையில் வசனங்கலை பேச எனக்கு பயிற்சி கொடுத்தார் என்று அனுபமா வெளிப்படையாக பேசியுள்ளார்.