நாய் விவகாரம் இருக்கட்டும்... நீயா நானாவில் கோபிநாத் எதிர்கொண்ட டாப்பிக்ஸ் இதுதான்..
Star Vijay
Gossip Today
Gopinath Chandran
Neeya Naana
By Edward
நீயா நானா
தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் தெரு நாய்கள் அகற்ற்ப்பட வேண்டும் - ஆதரிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்களை வைத்து விவாதம் நடந்தது. இந்த விஷயத்திற்கு ஆதரவளித்தவர்களை பலரும் கண்டித்தும் கோபிநாத்தையும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் நீயா நானா நிகழ்ச்சியின் இத்தனை ஆண்டுகால நிகழ்ச்சியில் எந்தெந்த டாப்பிக் விமர்சனங்களை எதிர்கொண்டது என்று பார்ப்போம்...
எதிர்கொண்ட டாப்பிக்ஸ்
- சில ஆண்டுகளுக்கு முன் விலங்குநல வாரியம் மற்றும் பீட்டா அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது நீயா நானா நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் - ஆதரவானவர்கள் என்று அனல்பறக்க வைக்கும் விதமான விவாதம் நடந்து பேசுபொருளாகியது.
- இதனையடுத்து சாதி, மதம் மறுப்பு திருமணத்தை மையப்படுத்தி விவாதம் நடந்து சிலரின் எதிர்ப்புகளையும் ஆதரவையும் பெற்று பேசுபொருளாக மாறியது.
- பாரம்பரிய உடை, மாடர்ன் உடை அணியும் பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடந்து பெரிய பேசுபொருளாக மாற்றியது நீயா நானா.
- ஹிந்தி திணிப்பு - தமிழ் மொழி என்ற தலைப்பில் இருத்தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட விவாதம் விமர்சனத்தை பெற்றது.
- காதல் திருமணம் vs பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற எபிசோட், புதுபுது ஆச்சரியமூட்டும் தகவல்களால் விமர்சிக்கப்பட்டது.
- இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறை, இளைஞர்கள் மது, சிகரெட் பிடிப்பது ஸ்டைல் என்று நம்புவர்கள், யார் காரணம் என்று எதிர்ப்பவர்களுக்கு இடையே நடந்த விவாதம்.
இதனை அடுத்து தெரு நாய்கள் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விவாதம் நடந்தது. சமீபத்தில் இந்த எபிசோட் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி, ஆதரவு கொடுத்தவர்களுக்கு எதிராக விமர்சனம் எழுந்துள்ளது.