உடலை வைத்து கேலி செய்ததால் மன உளைச்சல்! கடும்கோபத்தில் 15 வயதான சீரியல் நடிகை..
பிரபல தொலைக்காட்சியில் நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை நேஹா மேனன். இதையடுத்து நடிகை ராதிகாவின் வாணி ராணி சீரியலில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானார். தற்போது பாக்யலட்சுமி சீரியலில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து போடோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார் நேஹா. சீரியலில் நடிக்கும் போது உருவ கேலியை பற்றி தெரியாமல் இருந்த தனக்கு இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்களால் அது என்னவென்று தெரிந்தது என்று கூறியுள்ளார்.
மேலும், உடலை வைத்து கேலி செய்தும் மெசேஜ் செய்தும் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி 8 பேரை அதற்காக பிளாக் செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்ந்தாலும் அப்படிதான் செய்வேன் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு வருடத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் நேஹா மேனன்.