பீஸ்ட்டுக்கு பதில் அந்த படத்தையே நெல்சன் எடுத்திருக்கலாம்! இப்படி மிஸ் பண்ணிட்டாரே
இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு பிறகு அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். அவர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தபோது அதிகம் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதெல்லாம் இறுதியில் ட்ரோல்களாக வெச்சி செய்வார்கள் என நெல்சன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
நெல்சன் டாக்டர் படத்தை முடித்தபிறகு அவருக்கு கோலமாவு கோகிலா படத்தை ஹிந்தியில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அதை முதலில் ஒப்புக்கொண்ட நெல்சன் சில காரணங்களால் பின்னர் வெளியேறிவிட்டார்.
அதற்கு பிறகு தான் பீஸ்ட் படம் எடுத்தார் அவர். அதன் பின் வேறு ஒரு இயக்குனர் இயக்கத்தில் கோலமாவு கோகிலா ரீமேக்கில் ஜான்வி கபூர் நடித்து தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. Good Luck Jerry என்ற அந்த படம் ஜூலை 29ம் தேதி ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
பீஸ்ட் படம் எடுத்ததற்கு பதில் நெல்சன் அந்த படத்தையாவது இயக்கி இருக்கலாம், ட்ரோல்களில் இருந்து தப்பி இருப்பார் என நெட்டிசன்கள் தற்போது விசாரித்து வருகின்றனர்.